Search

Saved articles

You have not yet added any article to your bookmarks!

Browse articles

GDPR Compliance

We use cookies to ensure you get the best experience on our website. By continuing to use our site, you accept our use of cookies, Privacy Policy, and Terms of Service.

செப்டம்பர் வரை 987 கோடி லிட்டர் எத்தனால் விநியோகம்: AIDA

செப்டம்பர் வரை 987 கோடி லிட்டர் எத்தனால் விநியோகம்: AIDA

நவம்பர் 2025 முதல் அக்டோபர் 2026 வரையிலான காலத்தில் 1,197 கோடி லிட்டர் எத்தனால் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பகிரவும் WhatsApp Facebook

இந்தியாவில் 2025-26-ம் ஆண்டுக்கான எத்தனால் விநியோகத்தில் செப்டம்பர் மாத இறுதி வரை 987 கோடி லிட்டர் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதில் தானிய வகைகளிலிருந்து தயாரிக்கப்பட்ட எத்தனால் 71.4 சதவீதமாக உள்ளது என்று அகில இந்திய டிஸ்டில்லர்ஸ் சங்கம் (ஏஐடிஏ) தெரிவித்துள்ளது.

நவம்பர் 2025 முதல் அக்டோபர் 2026 வரையிலான காலத்தில், எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு 1,197 கோடி லிட்டர் எத்தனால் வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டது. செப்டம்பர் இறுதி வரை 82.5 சதவீதம் விநியோகிக்கப்பட்டுள்ளது.

தானிய வகைகளிலிருந்து மொத்தம் 705 கோடி லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்யப்பட்டது. இதில் மக்காச்சோளம் மூலம் 413 கோடி லிட்டரும், இந்திய உணவுக் கழகத்தின் உபரி அரிசி மூலம் 222 கோடி லிட்டரும் கிடைத்தன. சேதமடைந்த உணவு தானியங்கள் மூலம் 70 கோடி லிட்டரும், சர்க்கரை சார்ந்த மூலப்பொருள்களிலிருந்து 282 கோடி லிட்டரும் உற்பத்தி செய்யப்பட்டது. இது ஒதுக்கீடு செய்யப்பட்ட அளவில் 97.6 சதவீதமாகும்.

பெட்ரோலுடன் எத்தனால் கலக்கும் திட்டத்தில் தானியங்கள் மற்றும் சர்க்கரை சார்ந்த மூலப் பொருள்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. எத்தனாலின் பயன்பாட்டை எரிபொருள் வாகனங்கள், விமான எரிபொருள் உள்ளிட்ட துறைகளில் விரிவுபடுத்துவது அவசியம் என்று ஏஐடிஏ துணைப் பொதுச் செயலர் பாரதி பாலாஜி தெரிவித்தார். 

இதன் மூலம் எரிசக்திப் பாதுகாப்பை மேம்படுத்துவதுடன், விவசாயம் சார்ந்த தொழில்களிலும் முதலீடுகளை அதிகரிக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

முந்தைய செய்தி
இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி 23% உயர்வு
அடுத்த செய்தி
Indian firms turn to alternative investment funds

தொடர்புடைய செய்திகள்